Your Contributions can Change Life

For all your donations kindly use the online donation form and fill the requested information
be
the
change

எங்களது பயணம்

FISD ஆனது ஜூன் 2011 இல் ஸ்தாபிக்கப்பட்டது, அது FORUT (இலங்கையில் 1980 முதல் 2011 வரை செயல்பட்ட ஒரு நோர்வே INGO) 2009 இல் தொடங்கிய ஒரு செயல்முறைத் திட்டத்தின் சுழற்சியை நிறைவு செய்யும் பணியை மேற்கொண்டது. FORUT இன் உள்ளூர்மயமாக்கல் செயல்பாட்டின் போது நிறுவப்பட்ட நிறுவனங்களில் ஒன்றாக, FISD இன்று சமூக மாற்றத்திற்கான புதுமையான மாதிரிகளை பரீட்சித்து, மாவட்டங்கள், தேசிய மற்றும் சர்வதேச அளவில் அனைத்து வழிகளிலும் அடித்தள மக்களுடன் நேரடியாகப் பணிபுரியும் ஒரு முன்னணி தேசிய சிவில் சமூக அமைப்பாக இன்று பெருமையுடன் நிற்கிறது. கடந்த தசாப்தத்தைத் திரும்பிப் பார்க்கும்போது, FISD ஆனது சமூக மாற்றத்திற்கான சாத்தியமான மாதிரிப்படிவங்களுடன், அடித்தள மட்டத்தில் பரிசோதிக்கப்பட்டு, கொள்கை மாற்றத்திற்கு வாதிடுவதற்கான ஆதாரமாகப் பயன்படுத்தப்படுகின்ற அறிவு மையமாக (மற்றும் செயல் முனையாக) வளர்ந்துள்ளது. இந்த மாதிரிப்படிவங்கள் தேசிய மற்றும் சர்வதேச சிவில் சமூக அமைப்புகள் மற்றும் வலையமைப்புகளுடன் பகிர்ந்து கொள்ளப்படுகின்றன.

ஜூலை 2011 இல் நாங்கள் நிறுவப்பட்டதிலிருந்து, சமூக அபிவிருத்தியை (இலங்கை சமூகத்திலும் அதற்கு அப்பாலும்) முன்னேற்றம் மற்றும் வாழ்க்கையை வலுவூட்டும் நோக்கத்துடன் நாங்கள் அயராது உழைத்து வருகிறோம். சமூக அநீதி, மனித உரிமைகள் மீறல் மற்றும் ஒட்டுமொத்த வாழ்க்கைத் தரத்தின் சீரழிவுக்குப் பங்களிக்கும் முக்கிய செல்வாக்கு செலுத்தும் காரணிகளாகக் கருதப்படும் பிரச்சினைகளைச் சமாளிப்பதை இலக்காகக் கொண்டு எங்கள் முயற்சிகள் அமைந்துள்ளன.

நாங்கள் மூன்று கருப்பொருள்களின் கீழ் பல்வேறு நிகழ்ச்சித் திட்டங்களைத் தொடங்கி, செயல்படுத்தியுள்ளோம்: மதுபானம், போதைப்பொருள் மற்றும் மேம்பாடு (மதுபானம் மற்றும் பிற போதைப்பொருள்களின் துஷ்பிரயோகம் மற்றும் தொடர்புடைய தீங்குகள்); சிறுவர்களின் உரிமைகளைப் பாதுகாத்தல் மற்றும் ஊக்குவித்தல்; மற்றும் பாலியல் மற்றும் பாலின அடிப்படையிலான வன்முறைத் தடுப்பு. இந்த முயற்சிகள் ஒரு பாதுகாப்பான மற்றும் நிலைத்துநிற்கும் சமூகத்தை நோக்கி பகிரப்பட்ட வகிபங்குகள் மற்றும் பொறுப்புக்கூறும் நடைமுறைகளுடன் பராமரிப்பு கலாச்சாரத்தைக் கட்டியெழுப்புவதற்கான இறுதி இலக்குடன் ஒன்றிணைகின்றன.

ஒரு நிறுவனமாக, FISD இன் ஒட்டுமொத்த குறிக்கோளானது, சமூகத் தலைமைகள், சேவை வழங்குநர்கள் மற்றும் சிவில் சமூக அமைப்புகளுடன் இணைந்து, வலுவூட்டப்பட்ட சமூகங்களை உருவாக்க ஊக்குவிப்பதும் ஆதரவளிப்பதும் ஆகும். மேலும் பெண்கள் மற்றும் சிறுவர்களின் உரிமைகளைத் தீவிரமாக மேம்படுத்துதல், இந்த உரிமைகள் மீறப்படும்போது சிறுவர்கள் மற்றும் பெண்களைப் பாதுகாத்தல் மற்றும் ஆதரித்தல், மேலும் மதுபானம் மற்றும் போதைப்பொருள் பாவனையால் ஏற்படும் பாதிப்புகளைக் கட்டுப்படுத்துதல் போன்றனவாகும்.

Our Location

95/10, Bodhiya Road,
Mirihana, Nugegoda
Sri Lanka

Phone Number

+94 (0) 11 2779665
+94 (0) 11 2779172

Opening Times

8.30am – 4.30pm