Your Contributions can Change Life

For all your donations kindly use the online donation form and fill the requested information
be
the
change

நாங்கள் யார்

நவ்யோத்பாத சமூக அபிவிருத்தி நிறுவனம் (FISD) என்பது தரமான சமூக மேம்பாட்டிற்கு அர்ப்பணிப்புடன் செயலாற்றும் இலங்கையைத் தளமாகக் கொண்ட ஒரு அரச சார்பற்ற நிறுவனமாகும். சிறுவர்களின் உரிமைகளைப் பாதுகாத்தல் மற்றும் மேம்படுத்துதல், பெண்கள் மற்றும் சிறுமிகளின் நிலையை மேம்படுத்துதல், பாலியல் மற்றும் பாலின அடிப்படையிலான வன்முறைகளைத் தடுத்தல், மதுபானம் மற்றும் போதைப்பொருள் இல்லாத வாழ்க்கை முறையை உருவாக்குதல் ஆகியவற்றுக்கான ஒருங்கிணைந்த முழுமையான அணுகுமுறையின் மூலம் சமூக மேம்பாட்டை நோக்கி நாங்கள் பணியாற்றுகிறோம்.

சமபங்கு, புத்தாக்கம் (உரிமை, ஆதாரத்தின் அடிப்படையிலான) மற்றும் நீதி ஆகியவை எங்களின் முக்கிய விழுமியங்களாகும் மற்றும் இவை நிலையான மாற்றத்திற்கு தேவையான பங்கேற்பினை ஊக்குவிக்கும் அதே வேளையில் விளிம்புநிலையில் உள்ள மற்றும் பாதிக்கப்பட்ட மக்கள் மற்றும் சமூகங்களை மேம்படுத்துகின்ற எங்களது இலக்கினை அடைந்துகொள்ளவும் எங்களுக்கு உதவுகின்றது.

தூரநோக்கு

மாற்றத்துக்குள்ளாகும் இலங்கையில் வலுவூட்டப்பட்ட சமூகங்களானது உரிமைகள், நீதி மற்றும் சமத்துவத்தை அனுபவித்தல்.

பணி

அதிகாரம் பெற்ற மற்றும் வலுவூட்டப்பட்ட சிவில் சமூகத்தில் நீதி மற்றும் சமத்துவத்துடன் நிலைத்துநிற்கும் அபிவிருத்தியை நோக்கி செயல்பட [சமூகம், அரசு மற்றும் தனியார்] பங்குதாரர்களின் திறனை வளர்ப்பதற்கான புதுமையான தீர்வுகளை வழங்குதல்.

அர்த்தமுள்ள வழிமுறைகள் மற்றும் நடைமுறைகள் மூலம், பெண்களின் நிலையை மேம்படுத்துவதற்கும், குழந்தை வளர்ச்சிக்கான ஆரோக்கியமான சூழலை உருவாக்குவதற்கும், மதுபானம் மற்றும் போதைப்பொருள் இல்லாத சமூகத்தை உருவாக்குவதற்கும் சமூகங்களை அணிதிரட்டவும், கூட்டாக இணைந்து செயல்படவும் நாங்கள் ஆதரவளிக்கிறோம்.

Our Location

95/10, Bodhiya Road,
Mirihana, Nugegoda
Sri Lanka

Phone Number

+94 (0) 11 2779665
+94 (0) 11 2779172

Opening Times

8.30am – 4.30pm