சிறுவர் உரிமைகள் மற்றும் குழந்தை வளர்ச்சி

சிறுவர்கள் இன்றைய குடிமக்கள், ஆனால் அவர்களின் எதிர்காலமானது, வாய்ப்புகள் மற்றும் நம்பிக்கைகள் நிறைந்ததாக அமையும் என உத்தரவாதம் அளிக்க விரும்பினால், அவர்களையும் அவர்களின் உரிமைகளையும் பாதுகாக்க நிகழ்காலத்தில் நாம் தீவிரமாக செயல்பட வேண்டும். சிறுவர்கள் ஆரோக்கியமாக வளர, போதுமான அளவு அன்பு, கவனிப்பு, கல்வி மற்றும் பாதுகாப்பு என்பன அவசியமாகின்றன. ஆரோக்கியமான சமூகங்களே செழிப்பான சமூகங்களை உருவாக்குகின்றன.

சிறுவர் உரிமைகள் மாநாடு, சிறுவர்களின் உரிமைகளை நிலைநிறுத்துவதற்கு அரசு மற்றும் பாதுகாவலர்களின் பொறுப்பை வெளிப்படையாக வெளிப்படுத்துகிறது, இதனால் சிறுவர்கள் அவர்களின் முழுத் திறனையும் அடைய முடியும். சிறுவர்கள், அவர்களின் உரிமைகளை உணர்ந்து கொள்வதில் அவர்களின் அர்த்தமுள்ள பங்கேற்பும் ஒரு முக்கிய அங்கமாகும். எனவே ஒரு முழுமையான அணுகுமுறை இங்கு தேவைப்படுகிறது.

சிறுவர்களின் உரிமைகளை நிலைநிறுத்த சமூகங்களுக்கு வலுவூட்டல்:
குறிப்பிட்ட சமூகத்தில் சிறுவர்களின் உரிமைகளை வெற்றிகரமாக உணர்ந்து கொள்வதற்கான எந்தவொரு மூலோபாயத்தின் அடித்தளமும் சமூக வலுவூட்டலாகக் கருதப்படுகின்றது. ஆளுமையின் முழுமையான மற்றும் இணக்கமான வளர்ச்சிக்கு, ஒரு குழந்தை ஒரு குடும்பச் சூழலில், மகிழ்ச்சி, அன்பு மற்றும் புரிதல் ஆகியவற்றின் சூழலில் வளர வேண்டும், எனவே சிறுவர்களின் உரிமைகள் பற்றி பெற்றோர்கள்/ பராமரிப்பாளர்கள், சமூகம் மற்றும் சிறுவர்களுக்கு கற்றுக்கொடுப்பது மிகவும் முக்கியம்வாய்ந்ததாகும். இவ்வாறு வலுவூட்டப்படட சிறுவர்களும் சமூகங்களும் சிறுவர்களின் உரிமைகளுக்காக எழுந்து நிற்கும். வலுவூட்டும் செயல்முறையின் முக்கிய கூறுகளில் கல்வி, திறன்கள் மற்றும் வளங்கள் ஆகியவை உள்ளடங்குகின்றன.

சமூகங்களை வலுவூட்டுவதற்கு நாம் பயன்படுத்தும் முக்கிய உத்திகள்

கல்வி மற்றும் விழிப்புணர்வு
முக்கியமாக குடும்பம் மற்றும் சமூக அமைப்பை உள்ளடக்கிய வலுவூட்டும் செயல்பாட்டில் குழந்தையின் உரிமைகள் பற்றிய விழிப்புணர்வு மற்றும் கல்வி கட்டாயமாகிறது, எனவே குழந்தையின் முழுமையான வளர்ச்சிக்காக வீட்டிலும் சமூகத்திலும் ஆரோக்கியமான சூழலை உறுதி செய்வதற்கான அம்சங்களை முதன்மையாகக் கவனத்தில் கொள்ளவெண்டும். எனவே சிறுவர் உரிமைகள், சிறுவர்களுக்கு எதிரான உடலியல், உணர்வு, உளவியல் ரீதியான வன்முறைகள், சிறுவர் பாலியல் துஷ்பிரயோகம் மற்றும் சுரண்டல்கள், சிறுவர் கடத்தல், சிறுவர் தொழிலாளர்கள், சிறுவர் திருமணம் மற்றும் சிறுவர்களின் குரல்கள் கேட்கப்படாமல் இருப்பது ஆகியவை தொடர்பாக சிறுவர்கள் மற்றும் அவர்களின் பராமரிப்பாளர்கள்/பாதுகாவலர்கள், சமூகம் போன்றோரின் அறிவை மேம்படுத்துதல் முக்கியமானது.
திறன் உருவாக்கம் மற்றும் திறன் மேம்பாடு:
சிறுவர்களின் உரிமை மீறல்களை அடையாளம் காணவும், ஆரோக்கியமான பெற்றோர்-குழந்தை உறவுகளை வளர்ப்பதில் குடும்பங்களுக்கு ஆதரவளிக்கவும், சேவை வழங்குநர்களுடன் தொடர்பு கொள்ளவும், சிறுவர்களின் உரிமைகளுக்காக வாதிடவும், சமூகம் மற்றும் சிறுவர்களுடைய திறன் மற்றும் திறமையினை வளர்ப்பது முக்கியமானதாகும். இந்த முயற்சிகள் அதிகாரமளிக்கும் உருவகத்தினை அடிப்படையாகக் கொண்டவை, இது நிலைமைகள், வாய்ப்புகள், அணுகுமுறைகள் மற்றும் திறன்களைக் கவனத்தில்கொள்கின்றது. சாதகமான குழந்தை வளர்ப்பு, சரியான பதிலளிப்பு மற்றும் தொடர்பாடல், வீட்டில் முடிவெடுப்பதில் சிறுவர்களின் பங்கேற்பு, மதுபானம் மற்றும் பாலின அடிப்படையிலான வன்முறை இல்லாத சூழலைப் பராமரிப்பது ஆகியவை சிறுவர்களின் வளர்ச்சிக்கு சாதகமான சூழலை உருவாக்க ஆதரிக்க வேண்டிய திறன்களாகும். அதே சமயம், சிறுவர்கள் தமது உரிமைகளுக்காக நிற்கும் திறன் மற்றும் அவர்கள் சம்பந்தப்பட்ட அல்லது அவர்கள் மீது தாக்கத்தை ஏற்படுத்தும் பிரச்சினைகளில் தங்கள் கருத்துக்களை வெளிப்படுத்துவது என்பன சிறுவர்களின் வளர்ச்சியின் மற்றொரு முக்கிய அம்சமாகும். திறன் உருவாக்கம் மற்றும் திறன் மேம்பாடு இரண்டு நிலைகளில் மேற்கொள்ளப்படலாம், ஒன்று சமூக தளங்களைப் பயன்படுத்தும் பெரியவர்களுக்கும் மற்றொன்று சிறுவர்களுக்கான தளங்களைப் பயன்படுத்தும் சிறுவர்களுக்கும்.
ஆதரவு சேவைகளை வலுப்படுத்துதல்:
சிறுவர்களின் உரிமைகளை நிலைநாட்டுவது அனைவரின் பணியாகும். சமூகங்கள் தற்போதுள்ள சமூகத் தளங்களைப் பயன்படுத்தி அல்லது சிறுவர் உரிமைகளை மீறுவதற்கான கண்காணிப்புக் குழுக்களாக சிறுவர்களுக்கான நட்புக் குழுக்களை அமைக்கலாம், இது சமூக அளவிலான பாதுகாப்பு பொறிமுறைக்கு அடித்தளத்தை அமைக்கும், இது பிரதேச மற்றும் மாவட்ட மட்டத்தில் நடைமுறையில் உள்ள சிறுவர் பாதுகாப்பு பொறிமுறைகளுடன் இணைக்கப்பட வேண்டும். இந்த வழிமுறைகள் அனைத்தும் மனப்பான்மை, அறிவு, திறன்கள் மற்றும் வளங்களின் அடிப்படையில் வலுப்படுத்தப்பட வேண்டும் மற்றும் தேவைப்படும் நேரங்களில் சமூகங்கள் மற்றும் குழந்தைகளுக்கு அணுகக்கூடியதாக அமைந்திருக்க வேண்டும்.

ஆலோசனை மற்றும் கொள்கை:
நவீன அமைப்பில், சிறுவர்களின் உரிமைகளை முழுமையாக அடைவதற்கு கொள்கைகள் மற்றும் நடைமுறைகளை மாற்றுவது ஒரு முக்கிய அங்கமாகும். வலுவூட்டப்பட்ட சிறுவர்கள் மற்றும் சமூக உறுப்பினர்கள் கொள்கை மற்றும் நடைமுறையில் செல்வாக்குச் செலுத்தக்கூடிய பலவிதமான ஆலோசனை முயற்சிகளில் ஈடுபடலாம்.

ஒத்துழைப்பு மற்றும் கூட்டாண்மை
அடித்தளத்திலிருந்து தேசியம் வரையிலான பாதுகாப்பு பொறிமுறையின் நிலைத்துநிற்கும்தன்மைக்கு ஒத்துழைப்பும் கூட்டாண்மையும் பெரும் பங்களிப்பை வழங்குகின்றன.